மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது + "||" + Public grievance day meeting in Tiruvallur; Led by the District Collector

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கடனுதவி, பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், வீட்டுமனைப்பட்டா என்பது உள்ளிட்ட 231 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கோரிக்கை மனுக்கள்

அதைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பார்வை திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.9,300 வீதம் 5 மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரத்து 500 மதிப்பிலான கல்வி பயில்வதற்கு ஏதுவாக எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி வீடியோக்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தனி துணை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.
2. திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்
திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
3. திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ் சிறைபிடிப்பு
திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் சிறைபிடித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
4. திருவள்ளூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த கலெக்டர்
திருவள்ளூரில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் அங்குள்ள திரையரங்குக்குள் அமர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் , திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
5. திருவள்ளூரில் உள்ள கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளே நேற்று முன்தினம் மாலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை புகுந்தது.