பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்


பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:19 PM IST (Updated: 16 Nov 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் 6 இ்டங்களில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன்படி, ஜங்கால்பட்டி, ராஜதானி, எ.புதுக்கோட்டை, குச்சனூர், காமயகவுண்டன்பட்டி, கூழையனூர் ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அந்தந்த வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு மனு அளிக்கலாம். மேலும் இந்த முகாமில் ஓய்வூதியம், வீட்டுமனைப்பட்டா, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல், குடிநீர், சாலை வசதி தொடர்பான மனுக்களையும் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story