தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Nov 2021 9:27 PM IST (Updated: 16 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வசதி வேண்டும்
குஜிலியம்பாறை தாலுகா சின்னலுப்பை கிராமம் தெற்கு இந்திரா காலனியில் முறையாக சாலை வசதி இல்லை. இதனால் மழை காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் நடமாடவே முடியவில்லை. எனவே சாலை வசதி செய்து தரவேண்டும். 
-அறிவழகன், சின்னலுப்பை.
சாக்கடை கால்வாய் சேதம்
திண்டுக்கல் 13-வது வார்டு ஜோசப்காலனி நுழைவு பகுதியில் கல்லறை தோட்டம் அருகே சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. இந்த சாக்கடை கால்வாயின் மேல்பகுதி சேதம் அடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டு விட்டது. இதை சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ரமேஷ், திண்டுக்கல்.
பள்ளி வளாகத்தில் மழைநீர்
சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சிவாஜி, சின்னமனூர்.
சேதம் அடைந்த மின்கம்பம் 
வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு இந்திராநகரில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து விட்டன. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். 
-சென்றாயபெருமாள், சேவுகம்பட்டி.

Next Story