நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:40 PM IST (Updated: 16 Nov 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று மாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். நகராட்சி ஆணையாளரை கண்டித்து அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகராட்சி-மாநகராட்சி அலுவலர் சங்க தேனி நகர தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். 

இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு பேசினர். இதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 3 பேர் சமீபத்தில் முறையான விசாரணையின்றி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

Next Story