மின்கட்டணம் அதிக வசூல்: மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ரிஷிவந்தியத்தில் பரபரப்பு
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் பகுதிக்குட்பட்ட பாசார், சோழவாண்டிபுரம், முனிவாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ரிஷிவந்தியம் மின்வாரிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து, மின் கட்டண விவகாரம் குறித்து மின்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story