பலத்த மழைக்கு 8 வீடுகள் இடிந்தன


பலத்த மழைக்கு 8 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 16 Nov 2021 11:24 PM IST (Updated: 16 Nov 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பலத்த மழைக்கு 8 வீடுகள் இடிந்தன. 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை, 
மாவட்டத்தில் பலத்த மழைக்கு 8 வீடுகள் இடிந்தன. 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மழை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குமேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 12 மணி வரை நீடித்தது. மழையினால் மாவட் டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பல கண்மாய்களில் தண்ணீர் பெருக்கு அதிகரித்தது. பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.
 சிவகங்கையை அடுத்த வந்தவாசி கிராமத்தில் உள்ள அழகர் (வயது20) என்பவரின் வீடு நள்ளிரவு 12 மணி அளவில் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் அழகர், அவரது தாயார் லட்சுமி (50), தாத்தா சுப்பிரமணியன் (80) ஆகியோர் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் தப்பினர்.
உத்தரவு
 அவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் இடிந்த வீட்டின் முகப்பில் உள்ள ஓட்டுவாரத்தில் தங்கி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மழை காரணமாக சிவகங்கை தாலுகாவில் 2 வீடுகளும், காரைக்குடி தாலுகாவில் 4 வீடுகளும், திருப்பத்தூர் தாலுகாவில் 2 வீடுகளும் சேர்த்து 8 வீடுகள் இடிந்தன. இது தவிர மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பலத்த மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. மின் வயர்கள் அறுந்துகிடந்்தன. 
தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் உத்தரவின்பேரில் மின் ஊழியர்கள் பழுதுகளை சரி செய்தனர் இந்த பலத்த மழை காரணமாக 4 இடங்களில் உடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டது. 60 இடங்களில் மரக்கிளைகள் வெட்டப்பட்டது, 10 இடங்களில்
இழுவை கம்பி சரி செய்யப்பட்டது. 10 இடங்களில் மின்மாற்றிகள் பராமரிப்பு செய்யப்பட்டது. 30 இடங்களில் மின் அளவி மாற்றப்பட்டு உள்ளது என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார். 
மழைஅளவு
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை- 54.20,மானாமதுரை- 20, திருப்புவனம்- 49.40, தேவகோட்டை- 7.80 , காரைக்குடி- 33.50, திருப்பத்தூர் -12, காளையார்கோவில்- 52.60, சிங்கம்புணரி-10, மாவட்டத்தில் அதிகஅளவாக சிவகங்கையில் 54.20 மில்லி மீட்டரும் குறைந்த அளவாக தேவகோட்டையில் 7.80 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Next Story