காய்கறிகளின் விலை கடும் உயர்வு


காய்கறிகளின் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 16 Nov 2021 11:31 PM IST (Updated: 16 Nov 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. காய்கறிகளும் இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

தற்போது பெய்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்புவரை தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. 

இதேபோல் எந்த காய் எடுத்தாலும் கால் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்றாலும் அவை தரமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

இது குறித்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து விட்டது. 

விருப்பம் இருந்தால் வாங்குஇல்லை என்றால் சென்று விடு என்று வியாபாரிகள் கூறுகின்றனர். விலை உயர்வால் காய்கறிகள் வாங்கி சமைக்க முடியாத நிலை உள்ளது’’ என்றனர்.

Next Story