வாடகை செலுத்தாத 4 மீன் கடைகளுக்கு சீல்


வாடகை செலுத்தாத 4 மீன் கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 17 Nov 2021 12:06 AM IST (Updated: 17 Nov 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வாடகை செலுத்தாக 4 மீன்கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் புதுரோட்டில் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளின் உரிமையாளர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக கடைக்கு உரிய வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்துள்ளனர். இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு வாடகையை செலுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் உரிய வாடகை செலுத்தாததால் அந்த 4 கடைகளையும் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Next Story