வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
திருத்துறைப்பூண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிவாரண உதவி வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிவாரண உதவி வழங்கினர்.
விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூற...
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. மழைநீர் விளை நிலங்களில் புகுந்ததால் சம்பா தாளடி சாகுபடிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் ஏராளமான வீடுகள் இடிந்தன. கால்நடைகள் உயிரிழந்தன. அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும், நிவாரண உதவிகள் வழங்குவதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம, காமராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திருத்துறைப்பூண்டி வருகை தந்தனர்.
அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான பாமணி ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், திருத்துறைபூண்டி நகர செயலாளர் டி.ஜி.சண்முகசுந்தர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு அங்கிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் பகுதியில் மழை நீரால் சூழப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டனர்.
நிவாரண பொருட்கள்
பின்னர் அருகில் உள்ள புழுதிக்குடி கிராமத்தில் அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மற்றும் வீடுகளை இழந்து பொதுமக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செலவம், காமராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அரிசி, மளிகை பொருட்கள், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
அப்போது பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், மீனவர் சங்க தலைவர் வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சீராளன், ஒன்றிய பொருளாளர் குமார், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் பி.எஸ். மணியன், ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவம், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ்குமார், தலைக்காடு கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story