மாயனூர் கதவணையில் இருந்து திருச்சி காவிரிக்கு 42 ஆயிரத்து 835 கன அடி தண்ணீர் திறப்பு
மாயனூர் கதவணையில் இருந்து திருச்சி காவிரிக்கு 42 ஆயிரத்து 835 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணராயபுரம்,
மேட்டூர் அணை
தமிழகம் மற்றும் கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு மாவட்டங்களை கடந்து கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்து அங்கிருந்து திருச்சியை நோக்கி பாய்ந்து செல்கிறது.
தண்ணீர் திறப்பு
மாயனூர் கதவணைக்கு நேற்று மாலை நிலவரப்படி 43 ஆயிரத்து 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கதவணையில் இருந்து திருச்சி காவிரிக்கு 42 ஆயிரத்து 835 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கதவணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு 100 கன அடியும், தென்கரை வாய்க்காலுக்கு 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலுக்கு 20 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story