சேர்க்காடு கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
மதுபோதையில் பணிக்கு வந்த சேர்க்காடு கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர்
மதுபோதையில் பணிக்கு வந்த சேர்க்காடு கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா நேற்று பட்டா தொடர்பான கணக்குகளை தணிக்கை செய்தார். காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமத்தின் பட்டா தொடர்பாக விசாரித்தபோது அங்கு வந்திருந்த சேர்க்காடு கிராம உதவியாளரான பார்த்திபன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த உதவி கலெக்டர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தார்.
இதையடுத்து அவரை, போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து தாசில்தார் உத்தரவிட்டார்.
--
Related Tags :
Next Story