‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வசதி வேண்டும்
பூதலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்டயம்பட்டி கிராமம் தெற்கு தெருவில் மிக நீண்ட காலமாக மழைநீர் வடிகால் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி விடுகிறது. மேலும் தண்ணீரில் பாசி படிந்து உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாரதிராஜா, பூதலூர் தெற்கு.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
கோவில் நகரமான கும்பகோணம் பகுதியில் மடத்துதெரு, உச்சிபிள்ளையார் கோவில்தெரு, கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, நாகேஸ்வரன் கோவில் தெற்குவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றி த்திரிகின்றன. இதனால் வானகங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சமீபத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி இரண்டு போர் உயிரிழந்துள்ளனர். எனவே கும்பகோணம் நகராட்சியினர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும், மேலும் மாடுவளர்ப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
கொசு மருந்து அடிக்கப்படுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி 44-வது வார்டு நாகம்மாள் நகர், சேவியர் நகர், ராஜீவ்நகர் வடக்கு, ராயல் கார்டன் ஆகிய தெருக்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இரவில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மநாகராட்சியினர் உடனடியாக கொசுமருந்து அடிக்க வேண்டும். மேலும் அனைத்து தெருக்களிலும் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பன்றிகளை பிடித்து பட்டியில் அடைக்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், நாகம்மாள் நகர்.
சாலையில் ஓடும் கழிவு நீர்
தஞ்சாவூர் அய்யங்கடை தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலையில் வழிந்து ஒடுகிறது. மேலும் மழைதண்ணீரும் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைத்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், அய்யங்கடை தெரு.
Related Tags :
Next Story