தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையை சீரமைக்க வேண்டும்
மணவாளக்குறிச்சி பாலத்தில் இருந்து கடியப்பட்டணம் செல்லும் சாலையில் தம்புரான் கோவில் உள்து. இந்த கோவிலின் அருகில் இருந்து கல்லடிவிளை ஊருக்குள் செல்லும் சாலை தற்போது பெய்த மழையால் முழுவதும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷஜூ, கல்லடிவிளை.
சேதமடைந்த மின்கம்பம்
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைத்து மின்விளக்கை சரியான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கேசவன்புதூர்.
குடிநீரில் கம்பிளி பூச்சி
அழகியபாண்டியபுரம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்கரை ஊரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் ஒரு கம்பிளி பூச்சி உயிருடன் வந்தது. இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டிய முறையாக பராமரித்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன்.மேல்கரை
விபத்து அபாயம்
அழகப்பபுரம் பேரூராட்சி உட்பட்ட புன்னார்குளத்தில் கூண்டு பாலம் ஒன்று உள்ளது. இதன் மேலே தண்ணீர் செல்லும் கால்வாயும், கீழே சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் முகப்பில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
-தே.ஞானசிகாமணி, அழகப்பபுரம்.
சேதமடைந்த கைப்பிடி சுவர்
தோவாளையில் அரசு மேல்நிலைப்பள்ளி முன் பெரியகுளத்தின் மறுகால் ஓடை செல்கிறது. தற்போது பெய்த மழையால் மறுகால் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பள்ளியின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடி சுவர் சேதமடைந்தது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த கைப்பிடி சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-செல்வகுமரன், ஆரல்வாய்மொழி.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயின் மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், டி.வி.டி.காலனி.
Related Tags :
Next Story