உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை


உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 17 Nov 2021 1:53 AM IST (Updated: 17 Nov 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

உடையார்பாளையம்:

பலத்த மழை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் அன்றாட வேலையை செய்ய முடியாமலும், அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமலும் தவித்தனர்.
உடையார்பாளையம் கடைவீதியில் வியாபாரம் சரியாக நடக்காததால் வியாபாரிகள் வருத்தத்தில் இருந்தனர்.
மழைநீர் சூழ்ந்தது
கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, பருக்கல், காடுெவட்டாங்குறிச்சி, இலையூர், நாகல்குழி, பரணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கச்சிப்பெருமாள் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் மழை காரணமாக வேலப்பன் செட்டி ஏரி கடல் போல் காட்சியளித்தது.

Next Story