குளத்தில் அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு


குளத்தில் அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 1:56 AM IST (Updated: 17 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் மலையடிவாரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக பஞ்சநதி குளம் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறியது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அப்போது குளத்தில் செல்ல முடியாமல் தவித்த அரியவகை நட்சத்திர ஆமையை, குணசேகரன் மகன் செல்வகுமார் என்பவர் மீட்டு, இது குறித்து செட்டிக்குளம் கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி தலைவர் கலாதங்கராசு ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு வந்த வனக்காப்பாளர் ரோஜா, வனக்காவலர் சசிகுமார் ஆகியோரிடம் நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த ஆமையை நாரணமங்கலம் காப்புக் காட்டில் விட்டனர்.

Next Story