உடும்பியத்தில் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மழையால் உடும்பியத்தில் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
வேப்பந்தட்டை:
தண்ணீர் புகுந்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியம் ஊராட்சி பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது உடும்பியம் கிழக்கு தெருவில் மழைநீர் தேங்கி 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வருவாய்த் துறையினர் மீட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
வெளியேற்றும் பணி
அவர்களுக்கு வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆலயமணி ஆகியோர் உதவிப் பொருட்களை வழங்கினர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story