நெல்லையில் செல்போன் திருடியவர் கைது


நெல்லையில் செல்போன் திருடியவர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 2:03 AM IST (Updated: 17 Nov 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் செய்யது நசிருதீன். சம்பவத்தன்று இவரது செல்போனை 2 மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்போன் திருடியதாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த தாமஸ் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தாமஸ், நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story