செல்போனில் பேசியபோது விபரீதம்: விமான நிலைய ஊழியர் குடியிருப்பு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


செல்போனில் பேசியபோது விபரீதம்: விமான நிலைய ஊழியர் குடியிருப்பு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Nov 2021 1:47 PM IST (Updated: 17 Nov 2021 1:47 PM IST)
t-max-icont-min-icon

விமான நிலைய ஊழியர் குடியிருப்பு மாடியில் செல்போனில் பேசியபோது தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருபவர் விஜயகுமாா். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவா் மீனம்பாக்கத்தில் உள்ள தனியாா் செல்போன் ஷோரூமில் பணியாற்றி வந்தாா். இவர்கள் குடும்பத்துடன் மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் உள்ள ஆணையக ஊழியா்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நாகராஜ் நேற்று முன்தினம் இரவு விமான நிலைய ஊழியா் குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, பல்லாவரத்தில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story