அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்
நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா்.அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பார்சல் ஒன்றில் வாழ்த்து அட்டை என இருந்தது. இந்த பார்சலின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனையிட முடிவு செய்தனர். பின்னர், அவற்றை பிரித்து பார்த்த போது, 14 கிராம் எடை கொண்ட 26 பச்சை நிறத்திலான போதை மாத்திரைகள் இருந்தது.
அதேபோல் அமெரிக்காவில் இருந்து ஆந்திராவிற்கு வந்த ஒரு பார்சலை சோதனையிட்ட போது, 24 கிராம் உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் அமெரிக்காவில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு வந்த பார்சலில் இருந்த 105 கிராம் உயர்ரக கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, 3 பார்சல்களில் இருந்து வந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 129 கிராம் எடை கொண்ட கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சென்னை மற்றும் ஆந்திர மாநில முகவரிக்கு சென்று விசாரித்த போது அவை போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து யாருக்கா போதை மாத்திரைகள், கஞ்சா கடத்தப்பட்டு வந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஒரே நாளில் கடத்த முயன்ற போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story