நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிப்பு


நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 4:09 PM IST (Updated: 17 Nov 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 1.000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7-ந்தேதி முதல் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.55 அடியாகவும், நீர்வரத்து 525 கனஅடியாகவும், மொத்த கொள்ளளவு 2,999 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால் தற்போது உபரி நீர் திறப்பு காலை முதல் 1,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. அடையாறு ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ஏரியின் நீர் மட்டம் 21 அடிக்கு கீழ் வைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story