வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்


வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:54 PM IST (Updated: 17 Nov 2021 4:54 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 1ந் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிய வாக்காளராக சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 20ந் தேதி, 21ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 512 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவை 1,058 கட்டிடங்களில் அமைந்துள்ளன. இந்த கட்டிடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்றவை தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் www.nvsp.inஎன்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story