தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 400 லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 400 லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரத்து 400 லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனை
தூத்துக்குடியில் மீன்பிடிப் படகுகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் தூத்துக்குடி மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் உள்ள ஒரு குடோனில் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது. மேலும் ஒரு லோடு ஆட்டோவில் டிரம்களில் 400 லிட்டர் டீசல் இருந்தது. இந்த டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து டீசலுடன் டேங்கர் லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணை
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டீசலை சட்டவிரோதமாக கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இந்த டீசலில் கலப்படம் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story