கூடலூர் மாணவர் சஞ்சய் வெற்றி


கூடலூர் மாணவர் சஞ்சய் வெற்றி
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மாணவர் சஞ்சய் வெற்றி

கூடலூர்

கூடலூரில் உள்ள காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கல்லூரியில் வனவியல் படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் கோவாவில் நடந்த இளையோருக்கான தேசிய இறகுபந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டார். அதில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். தொடர்ந்து நேபாளத்தில் நடந்த சர்வதேச இறகுபந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். 

அதில் சவுதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் நேபாள வீரரை வீழ்த்தி சஞ்சய் முதலிடம் பிடித்தார். சர்வதேச போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற அவரை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.


Next Story