தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் முன்பு 5 போலீசார் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் முன்பு 5 போலீசார் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்
x
தினத்தந்தி 17 Nov 2021 7:54 PM IST (Updated: 17 Nov 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் முன்பு 5 போலீசார் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்திடம் நேற்று 5 போலீசார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தின் 32-வது கட்ட விசாரணை நேற்று முன் தினம் தொடங்கியது. வருகிற 25-ந் தேதி வரை விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 41 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் ஆஜராகினர்
முதல் நாளான நேற்று முன்தினம் தாசில்தார்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் உள்பட 7 பேர் ஒரு நபர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூட்டின்போது பணியில் இருந்த போலீசார் 5 பேர் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். போலீசாரிடம் இன்றும் (வியாழக்கிழமை) விசாரணை நடத்தப்பட உள்ளது.

Next Story