தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது
கயத்தாறு:
கோவில்பட்டி, கயத்தாறு, சாயர்புரம் பகுதியில் நேற்று மாலையில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.
கயத்தாறு- கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டாக காணப்பட்டது. மாலை சுமார் 5.15 மணிக்கு பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் அனைத்து விவசாயிகளும் நெற்பயிர் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கோவில்பட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து ஓடியது. இடி- மின்னலுடன் மழை பெய்ததால் மந்தித்தோப்பு ரோடு மெயின் ரோடு பகுதியில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சாயர்புரம்- தூத்துக்குடி
சாயர்புரம் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாயர்புரம் பஜாரில் மழையால் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
தூத்துக்குடியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு இரவிலும் சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது.
மின்சாதன பொருட்கள் பழுது
இதேபோல் திருச்செந்தூர், முத்தையாபுரம், ஸ்பிக்நகர், உடன்குடி, சாத்தான்குளம், எட்டயபுரம், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஏரல், குரும்பூர், சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆங்காங்கே சில இடங்களில் மழையால் மின்தடை ஏற்பட்டது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளில் டி.வி., இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
Related Tags :
Next Story