சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை...!


சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை...!
x
தினத்தந்தி 17 Nov 2021 9:32 PM IST (Updated: 17 Nov 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18-ம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக சென்னை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Next Story