உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2021 10:22 PM IST (Updated: 17 Nov 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஆய்வு

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை பெரிய ஏரி கரையோரம் இருளர் குடியிருப்பு உள்ளது. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த குடியிருப்பில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வெயில் மற்றும் மழை காலங்களில் பெரும் சிரமங்களுக்கு இடையே வசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிலையான இருப்பிட வசதி மற்றும் சாதி சான்றிதழ், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை கனிவுடன் கேட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூடிய விரைவில் சாதி சான்றிதழ், வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதோடு, தங்களது குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் இருளர் இன மக்களுக்கு அறிவுரை வழங்கி சென்றார்.

Next Story