மணல் கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவரை கைது
தவுட்டுப்பாளையத்தில் 60 மூட்டைகளில் மணல் கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
நொய்யல்
மணல் கடத்தல்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று காலை தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் சாக்குகளில் மணலை அள்ளி 60 மூட்டைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கடத்தி வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து சரக்கு ஆட்டோவை நிறுத்தி மணல் கொண்டு வந்ததற்கான அனுமதி சீட்டு கேட்டனர்.
டிரைவர் கைது
அப்போது அனுமதியில்லாமல் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணலை அள்ளி வருவதாக தெரிவித்தனர். அதனடிப்படையில் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவரும், உரிமையாளருமான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே வெங்கரை தேங்குபெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (43) என்பவரை கைது செய்தனர்.
ஆட்டோ பறிமுதல்
மேலும் சரக்கு ஆட்டோவையும், அதில் இருந்து 60 மூட்டை மணலையும் பறிமுதல் செய்தனர். அவருடன் இருந்த தவுட்டுப்பாளையம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மோகன்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story