கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்
x
தினத்தந்தி 17 Nov 2021 10:36 PM IST (Updated: 17 Nov 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுப்பதில் நட்சத்திர ஏரியின் பங்கு அளப்பரியது. இந்தநிலையில் கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். மேலும் கடந்த வாரமும் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. 
இதனால் அந்த நாட்களிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிய தொடங்கின. குறிப்பாக நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்தன. அதேபோல் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது. மேலும் ஏரியை சுற்றிலும் நீர்த்தாவரங்கள் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் ஏரி பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் நிலவியது. 
இதைத்தொடர்ந்து ஏரியில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நீர்த்தாவரங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆலோசனையின்பேரில் சுகாதார அலுவலர் சுப்பையா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று ஏரியின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மேலும் நகரில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர். 

Next Story