சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 17 Nov 2021 11:40 PM IST (Updated: 17 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு அருகே குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

 சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி கற்பகம் (வயது 45). இவர்கள் குடிசை வீட்டில் வசித்தனர். தொடர் மழையால் வீட்டின் சுவர் ஈரம் பாய்ந்து வலுவிழந்து காணப்பட்டது.

இவர்களது 3-வது மகன் விஜயகுமார் (18) பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் திடீரென இடிந்து வீட்டுக்குள் விழுந்தது. அதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட கற்பகம் அங்கேயே இறந்துவிட்டார். 

 மகன் படுகாயம்

அவரது மகன் விஜயகுமார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். விஜயகுமாரை அவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தகவலறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் இடிந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டனர். 

இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story