நடுவழியில் நின்ற அரசு பஸ்சை தள்ளிய கல்லூரி மாணவிகள்
நாட்டறம்பள்ளி அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை கீழே இறங்கி தள்ளிச்சென்றனர்.
ஜோலார்பேட்டை
-
-
நாட்டறம்பள்ளி அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை கீழே இறங்கி தள்ளிச்சென்றனர்.
நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் பலர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் வசதிக்காக வெள்ளநாயக்கனேரி, கொத்தூர், பச்சூர் வழியாக பர்கூருக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்கு வந்த பஸ்சில் ஏறி கல்லூரிக்கு புறப்பட்டனர்.
வெள்ளநாயக்கனேரி அருகே சென்றபோது எதிரே வந்த பள்ளி வேனுக்கு வழிவிட பஸ்ஸை திடீரென பிரேக் போட்டு டிரைவர் நிறுத்தினார் அதன் பிறகு புறப்பட்டபோது பஸ் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது பஸ்சை டிரைவரால் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.
இதனால் பஸ்ஸில் இருந்து கல்லூரி மாணவிகள் அனைவரும் கீழே இறங்கி சிறிது தூரம் வரை கிண்டலடித்தபடி சிரமத்துடன் தள்ளினர். அதன் பிறகு பஸ் இயங்கியது. அதன்பின் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சில் ஏறி புறப்பட்டனர்.
எத்தனையோ தனியார் பஸ்கள் இந்த வழியாக நல்லமுறையில் இயங்குகின்றன. அதில் பயணிகள் அலுங்காமல் குலுங்காமல் களைப்பின்றி சென்று வருகின்றனர. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்கள் இயக்க சம்மந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் அப்போது வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story