சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்


சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2021 12:14 AM IST (Updated: 18 Nov 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

மங்களமேடு, 
சேறும், சகதியுமான சாலை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம்சீகூர் ஊராட்சியில் அண்ணாமலை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இங்குள்ள சாலை 3½ அடி உயரத்திற்கு சேறும், சகதியுமாக உள்ளது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அவதியடைந்து வந்தனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தருமாறு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நாற்று நடும் போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர். மேலும், இந்த சாலையை விரைவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
இதில், சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story