உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்ம சாவு


உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 18 Nov 2021 12:23 AM IST (Updated: 18 Nov 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வரதராஜன் பேட்டையில் உள்ள  ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அருள் மகன் ராயப்பன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி கில்டாராணி (48).இவர் ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஷெரின் ஷெல்சியா. இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

பிணமாக கிடந்தார்

நேற்று முன்தினம் காலை  கில்டாராணி, வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் ராயப்பன் இல்லை. இதுகுறித்து தனது மகளிடம் கேட்ட போது, அப்பா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது இரவு 7 மணிக்கு அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள ஒரு தானிய கிடங்கு அருகே ராயப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

கொலையா?

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராயப்பன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story