கொள்ளிடம் ஆற்றில் விழுந்த முதியவர் சடலமாக மீட்பு


கொள்ளிடம் ஆற்றில் விழுந்த முதியவர் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 12:28 AM IST (Updated: 18 Nov 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் விழுந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தா.பழூர், 
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 70). இவர் கடந்த 11-ந் தேதி அறங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கன மழை பெய்து ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அவரது உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
இந்தநிலையில் கீழக்குடிகாடு கொள்ளிட கரையோரம் கருவேல மர புதர்களுக்கு நடுவில் ஆண் சடலம் ஒன்று சிக்கி உள்ளதாக தா.பழூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்ேபரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றினர். விசாரணையில் அது அய்யாதுரை உடல் என்பதும், ஆற்றில் விழுந்து ஒரு வார காலம் ஆகிவிட்டதால் அழுகிய நிலையில் கிடந்தது. இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொள்ளிடக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து  தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story