9-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


9-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

9-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சி, நவ.18-
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 76 ஆயிரத்து 147 ேபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) 9-வது கட்டமாக கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 314 இடங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் 108 இடங்களிலும் என மொத்தம் 422 இடங்களில் கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற 2 வகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story