மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வீட்டுக்குள் அடைத்து சித்ரவதை


மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வீட்டுக்குள் அடைத்து சித்ரவதை
x
தினத்தந்தி 18 Nov 2021 1:12 AM IST (Updated: 18 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததுடன் அவரை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கணவர்-மாமியார் கைது செய்யப்பட்டனர்.

கீரனூர்
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி திருச்சியில் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த மலைக்கண்ணு மகன் சிவசிதம்பரம் (வயது 30) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி சமயபுரம் கோவிலில் கட்டாய திருமணம் நடந்துள்ளது. மாணவிக்கு சிவசிதம்பரம் அத்தை மகன் ஆவார். இந்தநிலையில் மாணவியுடன் வாழ பிடிக்கவில்லை என கூறி அவரை தாய் வீட்டுக்கு சிவசிதம்பரம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், கூடுதலாக நகை மற்றும் பொருட்கள் கேட்டு அவரை சித்ரவதை செய்துள்ளனர். 
கணவர்-மாமியார் கைது
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தனது மகளை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் சிவசிதம்பரத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். மேலும், 30 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் நகை, பொருட்கள் கேட்டு வீட்டுக்குள் அடைத்து வைத்து எனது மகளை சித்ரவதை செய்துள்ளனர். தற்போது வாழ வரும்படி எனது மகளை மீண்டும் மிரட்டுகின்றனர் என்று கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.
 இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில் சிவசிதம்பரம் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிவசிதம்பரத்தின் தந்தை மலைக்கண்ணுவை போலீசார் தேடி வருகின்றனர் மாணவியை கட்டாயப்படுத்தி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story