2 மணி நேரம் பலத்த மழை


2 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 18 Nov 2021 1:28 AM IST (Updated: 18 Nov 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, வத்திராயிருப்பில் 2 மணி ேநரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகாசி, 
சிவகாசி, வத்திராயிருப்பில் 2 மணி ேநரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
சிவகாசியில் மழை 
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் பயங்கர இடியுடன் பெய்தது. 
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் என அனைத்து இடங்களில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
குடிநீர் குழாய் 
 சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதியை சரிவர  மூடாததால் அந்த இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நடந்து சென்றவர்களையும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களையும் கடும் சிரமத்துக்கு ஆளாக்கியது. 
இருந்தாலும் திடீர் மழையை பொதுமக்கள் ரசித்தனர். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் பெரும்பாலானவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 
இந்தநிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக, ஆக இந்த மழையானது பலத்த மழையாக பெய்தது. 
விவசாயிகள் மகிழ்ச்சி 
2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த மழையால் வத்திராயிருப்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.
இந்த மழையினால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். மாணவர்கள் மழையில் நனைந்த படியே தங்களது வீட்டிற்கு பள்ளி முடிந்து திரும்பினர். வத்திராயிருப்பு பகுதியில்  2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
அதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. 

Related Tags :
Next Story