3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலதாழையூத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் இசக்கிதுரை என்ற கட்டதுரை (வயது 20). இவர் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் தாழையூத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் தங்கசுடலை என்ற சுரேஷ் (25). இவரை கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கில் சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு வாகைகுளம் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (55). இவர் போக்சோ வழக்கில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இசக்கிதுரை உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று, இசக்கிதுரை உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story