மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 4:08 AM IST (Updated: 18 Nov 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாத காலமாக படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையில் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் 120 அடியை எட்டி நிரம்பியது. கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
கால்வாய் பாசனம்
இந்த நிலையில் கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் வினாடிக்கு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இது நேற்று மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
மேலும் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்படி அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Next Story