கார்த்திகை மாதம் பிறந்தது அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாத பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
கார்த்திகை மாத பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அய்யப்ப பக்தர்கள்
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
அதன்படி நேற்று காலை 5 மணிக்கு கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர். கோவில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையும் நேற்று தொடங்கியது.
குறைவான பக்தர்கள்
முன்னதாக அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒவ்வொறு ஆண்டும் இந்த அய்யப்பன் கோவிலில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குறைவான பக்தர்களே நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அவர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதேபோன்று ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிவித்து விரதம் தொடங்கியது. இதையொட்டி கடைகளில் துளசி மாலை, சந்தனம், ஜவ்வாது, இருமுடி பூஜை பொருட்கள், காவி வேட்டி, துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
Related Tags :
Next Story