தகராறை தடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடும்ப தகராறை தடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடும்ப தகராறை தடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-2 மாணவி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் மஞ்சு (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேட்டுக்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க சென்ற மஞ்சுவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அவர்களது ேதாட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவருடைய உறவினர் ஒருவர் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு கிராமமக்கள் விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாணவி மஞ்சுவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அவருடைய பெற்றோர் மற்றும் கிராமமக்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறை தடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story