குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 7:51 PM IST (Updated: 18 Nov 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூர், நவ.19-
திருப்பூர் அணைப்பாளையம் அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி அன்று முன்விரோதம் காரணமாக இந்து முன்னேற்ற கழக நிர்வாகி ஸ்ரீகாந்த் என்பவரை கொடூர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தில் சாமுண்டிபுரம் ஆர்.ஜி.பி. குடோன் பகுதியில் வசித்த தேனி பெரியகுளத்தை சேர்ந்த நாகராஜ் வயது 22, சாமுண்டிபுரத்தில் குடியிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் 24 ஆகியோரை வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவர்கள் இருவரும் பொதுமக்கள் மனதில் அச்சத்தையும், பாதுகாப்பாற்ற சூழலை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை முயற்சி செயலில் ஈடுபட்டதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.கோவை மத்திய சிறையில் உள்ள நாகராஜ், சக்திவேல் ஆகியோர் மீது ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் இதுவரை பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 52 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

----


Next Story