கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு தயாராகும் அகல் விளக்குகள்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் கடந்த 15 வருடங்களாக கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகளை பல வண்ணங்களில் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளை(வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல வண்ணங்களில் விதவிதமாக அகல் விளக்குகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை ஏற்றம் காரணமாக அகல் விளக்குகளை செய்து விற்பனை செய்தாலும் குறிப்பிட்ட லாபம் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதியுற்று வருகின்றனர்.
தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கியும், உபகரணங்கள் வழங்கியும் உதவ வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜெ.என் சாலை, பஜார் வீதி, டோல்கேட் பகுதி, ரெயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் கைகளால் செய்த அகல் விளக்குகள் மற்றும் எந்திரங்கள் மூலம் அச்சிடப்பட்டு உள்ள பல வண்ணங்களில் அகல் விளக்குகள் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story