9 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


9 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Nov 2021 10:32 PM IST (Updated: 18 Nov 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை  9 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். 
ஆய்வு 
திருவாரூர் முதலியார் தெருவில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது யாரும் விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டு கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் கீழவீதியில் இயங்கி வரும் ரேஷன் கடையினை கலெக்டர் பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, எடையளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள  தடுப்பூசி கண்டிப்பாக போட்டு கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
9,75, 734 பேருக்கு தடுப்பூசி 
திருவாரூர் மாவட்டத்தில்  இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 6,63,972 பேரும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 3,11,762 பேரும் என மொத்தம் 9,75,734 ேபருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் பாலசந்திரன், மாவட்ட வழங்கல்  அலுவலர் கீதா, நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story