ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2021 10:41 PM IST (Updated: 18 Nov 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கழிவறை ஜன்னல் வழியாக ஏறி குதித்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கழிவறை ஜன்னல் வழியாக ஏறி குதித்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கற்பழிப்பு வழக்கில் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் சேக் உதுமான் (வயது 21). இவர் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்உதுமானை கைது செய்தனர். நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க  ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.
தப்பி ஓட்டம்
ஏர்வாடி போலீஸ் நிலைய ஏட்டு முருகன் மற்றும் திருஉத்தரகோசமங்கை போலீஸ்காரர் ராஜூ ஆகியோர் அவரை அழைத்து வந்துள்ளனர்.
சேக்  உதுமான் தனக்கு ஒரு வாரமாக காய்ச்சல், சளி இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்ட டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்துள்ளனர். எனவே ஸ்கேன் பரிசோதனை செய்த நிலையில் அதற்கான அறிக்கையை வாங்க சென்றனர். அப்போது சேக் உதுமான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அவரை அனுப்பிவிட்டு போலீசார் காத்திருந்தபோது கழிவறை ஜன்னல் வழியாக ஏறி குதித்து கைதி தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய சேக்  உதுமானை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
இந்த நிலையில் கைதியை தப்பவிட்டு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக போலீசார் முருகன், ராஜூ ஆகியோரிடம் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story