வடமதுரை மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
நத்தம் அருகே உள்ள அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 26). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேடசந்தூர் ஆத்துமேட்டை சேர்ந்தவர் ஜமுனா (21). இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள சித்திமுக்தி விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணமகளின் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொண்டதால் அவர்களுடன் மணமக்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story