வீடு இடிந்து விழுந்து சிறுவன் சாவு


வீடு இடிந்து விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2021 11:09 PM IST (Updated: 18 Nov 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த இலுப்பதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் தரனேஷ் (வயது 9). சக்திவேலின் தந்தை அண்ணாதுரை. 

இந்த நிலையில் நேற்று மாலையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் அண்ணாதுரை, தரனேஷ் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். அண்ணாதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story