வாலிபரின் உடலை மீட்டுத்தர கோரிக்கை


வாலிபரின் உடலை மீட்டுத்தர கோரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2021 11:23 PM IST (Updated: 18 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்று விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மனைவி 2 குழந்தைகளுடன் வந்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தார் .

சிவகங்கை, 
மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்று விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மனைவி 2 குழந்தைகளுடன் வந்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தார் .
மலேசியா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ள கிளங் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது38). இவரது மனைவி சத்தியா (30). இவர்களுக்கு அதிதிஸ்ரீ (7) என்ற மகளும் அபினேஸ் (2) என்ற மகனும் உள்ளனர். அழகர்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டிற்கு வெல்டிங் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவரது மனைவி சத்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்நாட்டை சேர்ந்த நபர் அழகர்சாமி விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறி விபத்து தொடர்பான வீடியோக்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். 
மனு
இதனை தொடர்ந்து சத்தியா தனது இரு குழந்தையுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி கண்ணீர் மல்க மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story