கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்


கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2021 11:27 PM IST (Updated: 18 Nov 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

கூட்டம்

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வக்கீல் தங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் (பொறுப்பு) மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, புதிய மாவட்ட ஊராட்சி அலுவலகம் அமைப்பதற்கு தளவாட சாமான்கள் மற்றும் கணினிகள் வாங்குதல், மின்தடையின்போது பயன்படுத்தும் வகையில் புதிய மின்கலன் வாங்குதல் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வசந்தவேல், முருகேசன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story