திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 30 வீடுகள் சேதம்
தொடர் மழைக்கு 30 வீடுகள் சேதம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டியது. இதனால் மாவட்டம் முழுவதும் எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆம்பூர் தாலுகா பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஆங்காங்கே கரைபுரண்டு ஓடுவதால் காட்டு வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஆம்பூர் தாலுகா பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. வாணியம்பாடி தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் 10 வீடுகளும், திருப்பத்தூர் தாலுகாவில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் என மொத்தம் 30 வீடுகள் சேதமடைந்தன. தொடர் மழையால் ஏராளமான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 283 பேர் 8 இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story